இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
பாளையங்கோட்டையில் இளம்பெண் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
நெல்லை:
பாளையங்கோட்டை பர்கிட் மாநகர் கமாலியா தெருவைச் சேர்ந்தவர் பாதுஷா. இவருடைய மனைவி செய்யது அலி பாத்திமா (வயது 25). இவர் நேற்று காலையில் வீட்டில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, செய்யது அலி பாத்திமாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்யது அலி பாத்திமாவுக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் நெல்லை உதவி கலெக்டர் சந்திரசேகர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.