திருக்கார்த்திகை தீபங்கள் ஏற்றம்

சோலைமலை முருகன் கோவிலில் திருக்கார்த்திகை தீபங்கள் ஏற்றம்-சொக்கப்பனையும் கொளுத்தப்பட்டது

Update: 2021-11-19 20:50 GMT
அழகர்கோவில்
மதுரை அருகே அழகர் மலை உச்சியில் உள்ளது. முருகப் பெருமானின் ஆறாவது படைவீடு சோலைமலை முருகன் கோவிலாகும். இங்கு நேற்று மாலையில் மூலவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, வித்தக விநாயகர், மற்றும் வேல்சன்னதியிலும் பரணி தீபங்கள் ஏற்றப்பட்டு பின்னர் விசேஷ பூஜைகளும் மகா தீபாராதனைகளும் நடந்தது. தொடர்ந்து கோவில் பிரகாரம் முழுவதும் கார்த்திகை தீப விளக்குகளும் ஏற்றப்பட்டது. மேலும் ராஜகோபுரம் முன்பாக சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள், மேளதாளம் முழங்க, தீவட்டி பரிவாரங்களுடன் உற்சவர் சுவாமி எழுந்தருளினார். சுவாமியின் முன்னிலையில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. அதன் பின் சுவாமி சஷ்டி மண்டபத்திற்கு சென்று இருப்பிடம் சேர்ந்தார்.
மேலும் உசிலம்பட்டி அருகே தென் திருவண்ணாமலை என அழைக்கப்படும் திடியன் கைலாசநாதர் பெரியநாயகி அம்மன் கோவில் மலை உச்சியில் உள்ள தங்கமலைராமன் கோவிலில் கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு மகா தீபம் ஏற்றப்பட்டது. உசிலம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

மேலும் செய்திகள்