நடிகர் சூர்யா மீது நடவடிக்கை பா.ம.க.வினர் போலீசில் புகார்

நடிகர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க.வினர் போலீசில் புகார் மனு கொடுத்தனர்.

Update: 2021-11-19 20:41 GMT
ஈரோடு
நடிகர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க.வினர் போலீசில் புகார் மனு கொடுத்தனர். 
கோபி
‘ஜெய்பீம்’ என்ற திரைப்படத்தில் வன்னியர் சமூகத்தை இழிவுபடுத்தும் காட்சிகளை அமைத்தும். அதில் நடித்தும் சூர்யா படம் வெளியிட்டு உள்ளார். இதற்கு தமிழகம் முழுவதும் பா.ம.க.வினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அதன்படி கோபி சட்டமன்ற தொகுதி பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் நடிகர் சூர்யா மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கக்கோரி கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகத்திடம் மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் நஞ்சை ஞானவேல் தலைமையில் கட்சியினர் புகார் மனு கொடுத்தனர். இதில் மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் ஷேக் முகைதீன், மாநில அமைப்பின் துணைத் தலைவர் ஷாஜகான், நகர செயலாளர் சதீஷ்குமார், நகர தலைவர் சுரேஷ்குமார், கோபி ஒன்றிய செயலாளர் பூர்ண சாமி, வடக்கு மாவட்ட துணைத்தலைவர் ஆண்டவர், நம்பியூர் ஒன்றிய செயலாளர் சேகர், கோபி நகர நிர்வாகிகள் மாதேஷ், மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அந்தியூர்
இதேபோல் அந்தியூர் போலீஸ் நிலையத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் எஸ்.சி.ஆர்.கோபால் தலைமையில் கட்சியினர் அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்திலிடம் வன்னிய சமுதாயத்தை தவறாக சித்தரித்து படம் எடுத்த நடிகர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு கொடுத்தனர். இதில் மாவட்ட செயலாளர் மனோகரன், வக்கீல் கிருஷ்ணமூர்த்தி, அந்தியூர் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் முனுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சத்தியமங்கலம்-பவானி
சத்தியமங்கலத்தில் நடிகர் சூர்யாவை கண்டித்து பா.ம.க.வினர் மாவட்ட செயலாளர் ஏ.ஆர்.சசி மோகன் தலைமையில், துணை போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு கொடுத்தனர். இதில் மாவட்ட தலைவர் மாரிமுத்து, மாவட்ட அமைப்பு தலைவர் மூர்த்தி, சத்தி நகர செயலாளர் சரவணகுமார், வன்னியர் சங்க தலைவர் ஜீவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் பவானியில் நடிகர் சூர்யாவை கண்டித்து ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் மனோகரன் தலைமையில் கட்சியினர் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் புகார் மனு கொடுத்தனர். இதில் பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் எஸ்.சி.ஆர்.கோபால், மாநில துணைத்தலைவர் எம்.பி. வெங்கடாசலம், ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர்கள் பவானி ராஜேந்திரன், ஒலகடம் சேகர், மாவட்ட துணைச் செயலாளர் ஆண்டவன், பவானி நகர பொறுப்பாளர் பரணீதரன், ராஜ் நடராஜ், முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்