பேரணாம்பட்டு அருகே சிறுத்தை தாக்கி 2 பேர் படுகாயம்

சிறுத்தை தாக்கி 2 பேர் படுகாயம்;

Update: 2021-11-19 20:00 GMT
பேரணாம்பட்டு

பேரணாம்பட்டு வனச்சரக பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் இருந்து வருகிறது. வனப்பகுதியை ஒட்டியுள்ள நிலங்களில் சிறுத்தைகள் நுழைந்து கால் நடைகளை வேட்டையாடி வருகின்றன. இந்த நிலையில் பேரணாம்பட்டு அருகே உள்ள அத்திகுப்பம் கிராமத்தை சேர்ந்த விவசாயி முரளி (வயது 44), இவரது நிலத்தில் வேலை செய்யும் காவலாளி சக்திவேல் (21) ஆகிய இருவரும் நேற்று காலை 6.30 மணியளவில் வனப்பகுதியை ஒட்டியுள்ள முரளிக்கு சொந்தமான விவசாய நிலத்தில் பால் கறக்க சென்றனர். 

அப்போது முரளி, சக்திவேல் ஆகியோர் மீது சிறுத்தை பாய்ந்து தலை, நெற்றி உள்ளிட்ட இடங்களில் கடித்து குதறிவிட்டு அங்கிருந்து காட்டுக்குள் ஓடிவிட்டது. இருவரும் காயத்துடன் உயிர்த் தப்பினர். அங்கிருந்த  பெண் ஒருவர் அவர்கள் இருவரையும் மீட்டு பேரணாம்பட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். 
வனவர்கள் தரணி, ஹரி ஆகியோர் சென்று சிறுத்தை தாக்கி காயமடைந்த முரளி, சக்திவேல் இருவரையும் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது சம்மந்தமாக பேரணாம்பட்டு வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்