ஆற்று வெள்ளத்தில் தரைப்பாலம் உடைந்தது

ஆற்று வெள்ளத்தில் தரைப்பாலம் உடைந்தது

Update: 2021-11-19 19:56 GMT
குடியாத்தம்

குடியாத்தம் அருகே மூங்கப்பட்டு ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மீனூர், கொல்லிமேடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் குடியாத்தம் நகருக்கு வந்து செல்ல குடியாத்தம் சீவூர் வழியாக செல்லும் கானாற்று பாலத்தை கடந்து செல்லவேண்டும். மறு பகுதியில் பெரும்பாடி கவுண்டன்மகாநதி ஆற்றையும், அக்ராவரம் கவுண்டன்யமகாநதி ஆற்றையும் கடந்து செல்ல வேண்டும். தற்போது கவுண்டன்மகாநதி ஆற்றில் வெள்ளம் செல்வதால் இரண்டு பக்கமும் அவர்கள் செல்லமுடியாது. சீவூர் வழியாகத்தான் வந்து செல்ல முடியும்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கொல்லப்பல்லி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சீவூர் மூங்கப்பட்டு செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலம் இடிந்து விழுந்து ஒரு பகுதி அடித்துச் செல்லப்பட்டது. இதனால் மூங்கப்பட்டு செல்லும் வழி முற்றிலும் தடைபட்டது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் 3 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் குடியாத்தம் உள்ளிட்ட வெளி பகுதிகளுக்கு செல்ல முடியாமல் தனித்துவிடப்பட்டனர். 

மேலும் அவர்கள் இருசக்கர வாகனத்தின் வழியாக மட்டுமே புது காலனி, தட்டப்பாறை காலனி வழியாக வரமுடியும். எனவே, உடனடியாக சீவூர் பாலத்தை சீரமைத்து செல்ல வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்