ஊசூர், பள்ளிகொண்டாவில் பொதுமக்கள் சாலை மறியல்

ஊசூர், பள்ளிகொண்டாவில் பொதுமக்கள் சாலை மறியல்

Update: 2021-11-19 19:52 GMT
அடுக்கம்பாறை

, ஊசூர் அருகே உள்ள தெள்ளூர் ஊராட்சிக்கு உட்பட்ட குளத்துமேடு, வீரா ரெட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக குடியிருப்பு பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியே வர முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. 

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று ஊசூர்-அணைக்கட்டு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வின்சென்ட் ரமேஷ்பாபு, தெள்ளூர் ஊராட்சி மன்ற தலைவர் தேவிசுரேஷ், கிராம நிர்வாக அலுவலர் அசோக் உள்ளிட்டோர் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேசி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அணைக்கட்டு சாலையில் போக்குவரத்து பாதித்தது.

இதேபோல் அணைக்கட்டு தாலுகாவில் உள்ள  பள்ளிகொண்டா பெரிய ஏரி தண்ணீர் பள்ளிகொண்டா யாதவர் தெரு உள்ளிட்ட ஐந்து தெருவில் தண்ணீர் புகுந்துள்ளது. தண்ணீரை வெளியேற்ற அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதியைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அய்யாவு நகர் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். 
தகவல் அறிந்ததும் பள்ளிகொண்டா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிட செய்தனர். 

மேலும் செய்திகள்