விபத்தில் காவலாளி பலி

அருப்புக்கோட்டையில் நடந்த விபத்தில் காவலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-11-19 19:42 GMT
அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டை ராஜீவ்நகரை சேர்ந்தவர் ராமசுப்பு (வயது 75). இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் பணி முடிந்து சைக்கிளில் ராமசுப்பு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது மதுரை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் சாய்பாபா கோவில் எதிரே அடையாளம் தெரியாத வாகனம் சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ராமசுப்பு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்