முக்கிய குற்றவாளி கைது

மாணவி பலாத்கார வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

Update: 2021-11-19 18:10 GMT
காரைக்குடி, 
மாணவி பலாத்கார வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
அழகு நிலையம்
காரைக்குடியில் தனியார் பள்ளியில் படிக்கும் பிளஸ்-2 மாணவி தனது வகுப்பு தோழி அழைப்பின் பேரில் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தோழியின் தாய் இருவரையும் தான் வேலை பார்க்கும் அழகு நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். 
அங்கு அழகு நிலைய பொறுப்பாளர் மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் அருகில் உள்ள சிலிகுரியை சேர்ந்த மன்சில் (வயது 28) என்பவரிடம் மாணவியை அறிமுகம் செய்து உள்ளார். அதனைத்தொடர்ந்து அவர்கள் நெருங்கி பழகி உள்ளனர். அதன் விளைவாக அவர்கள் அனைவரும் டிக்-டாக் செய்வது, மது அருந்துவது, இரவு சினிமாவிற்கு செல்வது ஆகிய செயல்களில் ஈடுபட்டுள்ளனர். 
புகார்
அதன் விளைவாக அந்தமாணவியை மன்சில் தனது  வீட்டிற்கு வரவழைத்து மது அருந்த வைத்து, விருந்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வினோஜி உத்தரவின் பேரில் காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி அழகுநிலைய பொறுப்பாளர் மன்சில், அங்கு வேலை பார்த்த விக்னேஷ் (29). சிரஞ்சீவி (30), சென்னையை சேர்ந்த ஹாரிஸ் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். 
விசாரணை
இதில் தலைமறைவான மன்சில், ஹாரிஸ் ஆகியோரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவான மன்சில் காரைக்குடியில் தான் தங்கியிருந்த வீட்டிற்கு வந்து விட்டு மீண்டும் தப்ப முயன்றபோது அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மன்சிலிடம் போலீசார் ஏற்கனவே கைதானவர்களிடம் கைப்பற்றப்பட்ட செல்போனில் உள்ள வீடியோக்களை காட்டி விசாரணை நடத்தியபோது அதில் உள்ள ஹாரிசை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அதில் உள்ளது நான் இருந்த வீடு இல்லை என்று கூறியுள்ளார். 
ரகசிய தகவல்
மாணவியுடனான தொடர்பு மற்றும் உறவு பற்றி ஒப்புக் கொண்டார். மன்சில் கூறிய ரகசிய தகவல்கள் குறித்து போலீசார் விசாரணையை தொடர்கின்றனர். வீடியோவில் உள்ள ஹாரிஸ் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின் றனர். கைது செய்யப்பட்ட மன்சிலை கோர்ட்டில் ஆஜர படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்