வெறி நாய்கள் கடித்து 33 ஆடுகள் சாவு

வெறி நாய்கள் கடித்து 33 ஆடுகள் இறந்தன.;

Update: 2021-11-19 18:05 GMT
தேவகோட்டை, 
தேவகோட்டை அருகே உள்ளது வலங்காவயல் கிராமம். அந்த கிராமத்தைச் சேர்ந்தவர் சோலை. இவர் 38 ஆடுகள் வளர்த்து வந்தார். தோட்டத்தில் உள்ள கொட்டகையில் 38 ஆடுகளை நேற்றுமுன்தினம் இரவு அடைத்து விட்டு வீட்டிற்கு வந்து விட்டார். வழக்கம்போல் நேற்று காலை ஆடுகளை திறந்துவிட சென்றபோது 38 ஆடுகளில் 33 ஆடுகள் இறந்து கிடந்தன. 5 ஆடுகள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தன. இதுபற்றி அவர் தேவகோட்டை கால்நடை மருத்துவமனைக்கு தகவல் அளித்தார். ஆறாவயல் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் 3 வெறி நாய்கள் ஆடுகளை கடித்து கொன்றது தெரியவந்தது. 

மேலும் செய்திகள்