ரூ.8 லட்சம் தங்கக்கட்டி திருட்டு

ரூ.8 லட்சம் தங்கக்கட்டி திருட்டு

Update: 2021-11-19 17:51 GMT
கோவை

கோவை சுக்கரவார்பேட்டையை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 40). நகைப்பட்டறை உரிமையாளர். இவர் ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகார் மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:- எனது பட்டறையில் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த மொபிபுல் இஸ்லாம் (32) என்பவர் பணிபுரிந்து வந்தார். அவர், கடந்த 18-ந் தேதி பணிக்கு வரவில்லை. இது குறித்து சக ஊழியர்களிடம் விசாரித்த போதும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. 

இந்த நிலையில் நகைப்பட் டறையில் வைத்திருந்த 180 கிராம் தங்கக்கட்டியை காணவில்லை. அதன் மதிப்பு ரூ.8 லட்சம் ஆகும். அதை மொபிபுல் இஸ்லாம் திருடி விட்டு தப்பி சென்று விட்டார். உரிய விசாரணை நடத்தி தங்கக் கட்டியை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்