போதை மாத்திரை விற்ற வாலிபர் சிக்கினார்

போதை மாத்திரை விற்ற வாலிபர் சிக்கினார்

Update: 2021-11-19 17:51 GMT
கோவை

கோவை ஆர்.எஸ்.புரம் ஆரோக்கியசாமி ரோட்டில் போலீசார் ரோந்து பணி சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்ற வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் அவர் பி.என்.புதூரை சேர்ந்த அமர்நாத் (வயது25) என்பதும்,போதை மாத்திரைகளை விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததும் தெரியவந்தது. 

உடனே அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்