குடியிருப்புக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
குடியிருப்புக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டம் கிளியனூரை அடுத்த உப்புவேலூர் பகுதியில் பெய்த கனமழையினால் அங்குள்ள தாழ்வான பகுதியில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த மக்கள் நேற்று காலை உப்புவேலூர் பாலம் அருகே திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கிளியனூர்- உப்புவேலூர் சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்து வந்த கிளியனூர் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பாதிக்கப்பட்ட மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்ததை தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டனர்.