கமுதி,
கமுதி அருகே கீழராமநதி ஊராட்சியில் உள்ள கூட்டுறவு வேளாண் சங்கத்தில் விவசாயிகளுக்கு உரம் வழங்காமல் ஏராளமானோர் அலைக்கழிக்கப்படுவதாக அந்த பகுதி விவ சாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கமுதி- அருப்புக்கோட்டை சாலையில் ஒரு மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. போலீஸ் துணை சூப்பிரண்டு பிரசன்னா தலைமையில் போலீசார் விரைந்து வந்து விவசாயி களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அந்த வழியாக வந்த காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. விவசாயிகளிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி உடனடி யாக உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.