‘தினத்தந்தி’ புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.

Update: 2021-11-19 16:17 GMT
திண்டுக்கல்:
சாலையில் திரியும் மாடுகள் 
கம்பத்தில் வாகன போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிகின்றன. அவை சாலையின் நடுவே படுத்து கொள்கின்றன. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கி கொள்கின்றனர். அதோடு மாடுகளும் காயம் அடைகின்றன. இதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -அப்பாஸ், கம்பம்.
பள்ளி முன்பு குப்பைகள்
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் பின்பகுதியில் அமைந்துள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் முன்பு குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், குப்பை குவியலில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் மாணவிகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பள்ளி முன்பு கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும். -துரைச்சாமி, திண்டுக்கல்.
கால்வாய் ஆக்கிரமிப்பு 
ஆத்தூர் தாலுகா அழகர்நாயக்கன்பட்டி குளத்தில் இருந்து போடிகாமன்வாடி குளத்துக்கு தண்ணீர் செல்லும் கால்வாயில் ஆக்கிரமிப்பு உள்ளது. இதன்மூலம் கால்வாய் குறுகி விட்டதால் தண்ணீர் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே கால்வாயில் இருக்கும் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். -சுரேஷ், அழகர்நாயக்கன்பட்டி.
பாதாள சாக்கடையால் ஆபத்து 
திண்டுக்கல் மீன் மார்க்கெட் பின்பகுதியில் பாதாள சாக்கடை மூடி சேதம் அடைந்து விட்டது. இதனால் நடுத்தெருவில் பள்ளம் உருவாகி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இரவு நேரத்தில் அந்த வழியாக செல்பவர்கள் தடுமாறி விழுந்து காயம் அடைகின்றனர். எனவே ஆபத்தை ஏற்படுத்தும் பாதாள சாக்கடையை சரிசெய்ய வேண்டும். -யாசர்அராபத், திண்டுக்கல்.
சேதம் அடைந்த சாலை 
வேடசந்தூர் தாலுகா தருமத்துபட்டியில் இருந்து டொக்குவீரன்பட்டிக்கு செல்லும் சாலை சேதம் அடைந்து விட்டது. இந்த சாலை முழுவதும் குண்டும், குழியுமாக மாறிவிட்டதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். பொதுமக்களின் நலன்கருதி சாலையை சீரமைக்க வேண்டும். -சந்தனத்துரை, தேவநாயக்கன்பட்டி.
குளம் போல் தேங்கிய மழைநீர்
தேவி மாவட்டம் வீரபாண்டி அம்மன்நகரில் குடியிருப்பு பகுதியில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோயை பரப்பும் அபாயம் உள்ளது. எனவே, மழைநீர் வெளியேற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -தினேஷ், வீரபாண்டி.

மேலும் செய்திகள்