கோவில்பட்டி அருகே பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய பஞ்சாயத்து ஊழியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்

கோவில்பட்டி அருகே பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய பஞ்சாயத்து ஊழியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்

Update: 2021-11-19 14:45 GMT
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே ஆசை வார்த்தை கூறி 10-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக போக்சோ சட்டத்தில் பஞ்சாயத்து ஊழியர் கைது செய்யப்பட்டார்.
பாலியல் பலாத்காரம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள பன்னீர்குளம் பஞ்சாயத்து அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தவர் சீனிவாசன் (வயது 43). இவர் 10-ம் வகுப்பு மாணவியை திருமண ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதில் அந்த மாணவி கர்ப்பமானார். ஆனால், சீனிவாசன் திருமணம் செய்யாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
கைது
இந்த நிலையில் 7 மாத கர்ப்பிணியான அந்த மாணவி இதுகுறித்து கோவில்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில், கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு உதயசூரியன் விசாரணை நடத்தினார். பின்னர் இது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், பஞ்சாயத்து ஊழியர் சீனிவாசனை கைது செய்தனர். பின்னர் அவரை அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் நாககுமாரி மற்றும் போலீசார் கோர்ட்டில் ஆஜர் செய்தனர்.

மேலும் செய்திகள்