பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது

பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது

Update: 2021-11-19 13:59 GMT
பந்தலூர்

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட மாங்கோடு அருகே கூவலக்கொல்லி ஆதிவாசி கிராமம் உள்ளது. இங்கு கூடலூர் ஒன்றியம் சார்பில் ஒப்பந்ததாரர்கள் மூலம் தொகுப்பு வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக நேற்று வயநாடு மாவட்டம் கல்பெட்டாவில் இருந்து எம்.சாண்ட் மணல் ஏற்றிக்கொண்டு கூவலக்கொல்லி நோக்கி லாரி ஒன்று வந்தது.

அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர் விபத்துகள் நடப்பதால் அங்கு தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்