போலீஸ் ஏட்டு வீட்டில் திருட்டு
சென்னை தாம்பரத்தில் போலீஸ் ஏட்டு வீட்டில் கொள்ளையர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.;
சென்னை தாம்பரம் அடுத்த புது பெருங்களத்தூர் சுப்பம்மாள் நகர், பாரதி அவென்யூ, 1-வது தெருவைச் சேர்ந்தவர் துரைசாமி (வயது 56). இவர், தாம்பரம் போலீஸ் நிலையத்தில் ஏட்டுவாக பணிபுரிந்து வருகிறார்.
இவர், நேற்று முன்தினம் மதியம் வீட்டை பூட்டைவிட்டு பணிக்கு சென்றார். அவரது குடும்பத்தினரும் வெளியே சென்று இருந்தனர். பின்னர் பணி முடிந்து இரவு வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு துரைசாமி அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, எல்.இ.டி. டி.வி., இருசக்கர வாகனம், ஹோம் தியேட்டர் என ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை மர்மநபர்கள் திருடிச்சென்று இருப்பது தெரிந்தது. இது குறித்து பீர்க்கன்காரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.