மாநகர பஸ்களில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள அரசு பஸ் பணிமனையில் நேற்று மாலை மாநகர பஸ்களின் தரம் குறித்து அம்பத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் அசோக்குமார், இன்ஸ்பெக்டர் ரமேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.;
பஸ்களின் உள்புறத்தில் மழை நீர் வடிகிறதா? பிரேக், ஆக்சிலேட்டர், ஸ்டீயரிங் மற்றும் பஸ்சின் அடிப்பாகத்தின் தரம், என்ஜின் உள்ளிட்டவைகள் முறையாக செயல்படுகிறதா? என 3 மணி நேரம் சோதனை செய்தனர். இந்த பணிமனையில் மொத்தம் 159 பஸ்கள் உள்ளன. அதில் நேற்று 20 பஸ்களில் மட்டும் சோதனை நடத்தப்பட்டது. இந்த ஆய்வு பணி தொடரும் என வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.