சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

Update: 2021-11-19 05:11 GMT
எருமப்பட்டி:
மோகனூர் ஒன்றியம் ஓலப்பாளையம் பகுதியை சேர்ந்த பழனியப்பன் மகன் அருண்குமார் (வயது 28). இவருக்கும், எருமப்பட்டி அருகே வரதராஜபுரம் ஊராட்சியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட அருண்குமார் சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி நன்செய் இடையாறு பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இதையடுத்து சிறுமியுடன் அருண்குமார் மோகனூர் ஒன்றியத்தில் உள்ள ஒரு பகுதியில் வசித்து வந்தாராம்.  அப்போது சிறுமியை அருண்குமார் பலாத்காரம் செய்ததில் சிறுமி கர்ப்பம் அடைந்தார். சிறுமி திருமணம், கர்ப்பம் அடைந்தது குறித்து அறிந்த சைல்டு லைன் உறுப்பினர்கள் நந்தினி, சுப்ரமணியம், கிராம நிர்வாக அலுவலர் கல்பனா ஆகியோர் இதுதொடர்பாக எருமப்பட்டி வட்டார குழந்தை திருமண தடுப்பு விரிவாக்க அலுவலர் செல்வராணிக்கு தகவல் ெதரிவித்தனர். அவர் இதுகுறித்து எருமப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி சிறுமியை திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த அருண்குமாரை ேபாக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும் செய்திகள்