தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரெயில்கள் இயக்க வேண்டும்
ரெயில்வே வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரெயில்கள் இயக்க வேண்டும் என்று ரெயில்வே கருத்துக்கேட்பு கூட்டத்தில் எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.
மதுரை
ரெயில்வே வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரெயில்கள் இயக்க வேண்டும் என்று ரெயில்வே கருத்துக்கேட்பு கூட்டத்தில் எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.
கருத்து கேட்பு கூட்டம்
நாடாளுமன்ற பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய ரெயில்வே திட்டங்கள் குறித்து அந்தந்த பகுதிகளில் உள்ள எம்.பி.க்களிடம் ரெயில்வே நிர்வாகம் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்தும். அதன்படி தென்னக ரெயில்வேயின் மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட எம்.பி.க்களின் கருத்து கேட்பு கூட்டம் மதுரை ரெயில்வே காலனியில் நேற்று நடந்தது.
தெற்கு ரெயில்வே பொது மேலாளர் மல்லையா தலைமை தாங்கினார். ரெ யில்வே முத ன்மை போக்குவரத்து மேலாளர் நீனு இட்டியரா, முத ன்மை வர்த்தக மேலாளர் ரவி வல்லூரி, ரெ யில்வே கட்டுமான நிர்வாக அதிகாரி பிரபுல்ல வர்மா, கோ ட்ட ெர யில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் எம்.பி.க்கள் வைகோ, எஸ்.திருநாவுக்கரசர், கனிமொழி,, கார்த்தி சிதம்பரம், எஸ்.ஞானதிரவியம், தனுஷ் எம்.குமார், பி.வேலுச்சாமி, முகமது அப்துல்லா, ஏ.விஜயகுமார், சோமபிரசாத், பி.ரவீந்திரநாத், சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர், கொடிக்குன்னில் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஒட்டன்சத்திரம்
கூட்டத்தில் தேஜஸ் ரெயில் சென்னை செல்லும் போதும், சென்னையில் இருந்து திரும்பும் போதும் தாம்பரம் ெரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
மதுரை - திருவனந்தபுரம் இடையே ஒட்டன்சத்திரம் வழியாக செல்லும் அமிர்தா விரைவு ரெயிலை காய்கறி, பழ விவசாயிகள் பயன்படும் வகையில் ஒட்டன்சத்திரத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறினர்.
மிக முக்கியமாக மதுரை-தேனி-போடி இடையே விரைவில் ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தனர்.
வைகோ
கூட்டத்திற்கு பின் வைகோ நிருபர்களிடம் கூறும் போது, தென்மாவட்டத்திற்கு தேவையான கூடுதல் ரெயில்களை இயக்க வேண்டும். ஏற்கனவே நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். ரெயில்வே வேலை வாய்ப்பில் தமிழர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்பதனை வலியுறுத்தினேன், என்றார்.
கனிமொழி
கனிமொழி எம்.பி. கூறியதாவது:-
கொரோனா காலகட்டத்தில் தமிழகத்தில் பல்வேறு ரெயில்களுக்கு நிறுத்தம் குறைக்கப்பட்டிருந்த நிலையில் அதனை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். நிறுத்தங்களை தொடர வேண்டும். தூத்துக்குடியில் இருந்து கூடுதலாக நெல்லை, கோவை, சென்னைக்கு புதிய ரெயில் சேவை தொடங்க வேண்டும்.
தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதிய ரெயில் பாதைக்கு சர்வே எடுத்தது கிடப்பில் போடப்பட்டுள்ளது. தென் மாவட்டத்தில் இயக்கப்படும் பல ரெயில்களில், பெட்டிகள் மிகவும் பழமையாக உள்ளன. மழை பெய்தால் ஒழுகுகிறது. எனவே பழைய பெட்டிகளை அப்புறப்படுத்திவிட்டு புதிய பெட்டிகளை இணைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறியதாவது:-
அதிகாரமற்ற அதிகாரிகளால் நடத்தப்பட்ட சம்பிரதாய கூட்டம் என்பதால் எங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் என்ற நம்பிக்கை இல்லை. சிவகங்கை தொகுதியில் நாட்டரசன்கோட்டை, செட்டிநாடு ஆகிய ரெயில் நிறுத்தம் கேட்டுள்ளோம். அதையும் ஏற்கவில்லை. நாங்கள் வைக்கும் கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் உடனடியாக பதில் சொல்ல மறுக்கின்றனர். ரெயில்வே போர்டுதான் முடிவு செய்யும் என்கின்றனர். அப்படியென்றால் எதற்கு இந்த கூட்டம்? இந்த கூட்டத்தின் மூலம் பலன் இருப்பதாக தெரியவில்லை. பொதுமக்களின் தேவைகளுக்காக எடுத்துரைக்கும் கருத்துக்களை மத்திய அரசு மதிப்பதில்லை. ஆனால் வருமானவரித்துறை, அமலாக்கத்துறையினர் மூலம் மட்டுமே எங்களிடம் மத்திய அரசு பேசுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மதுரை-போடி
ரவீந்திரநாத் எம்.பி. கூறியதாவது:-
மதுரை-போடி அகல ரெயில் பாதை பணிகள் கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் நான் எம்.பி. ஆனபின்பு தான் இந்த திட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தொடர்ந்து பேசி திட்டத்தை விரைவுபடுத்தினேன். அதனால் தான் 75 சதவீத பணி நிறைவடைந்து இருக்கிறது. இந்த பாதையில் மதுரை-தேனி இடையே பணிகள் முழுவதும் முடிந்து சோதனை ஓட்டமும் வெற்றி பெற்றுள்ளது. தேனி-போடி இடையே பணி நடந்து வருகிறது. மார்ச் மாதத்திற்குள் மதுரை-போடி இடையே ரெயில் சேவை நிச்சயம் தொடங்கி விடும். திண்டுக்கல் முதல் லோயர் கேம்ப் பகுதி வரை அகல ரெயில் பாதை திட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். பாண்டியன் எக்ஸ்பிரஸ், திருப்பதி- ராமேசுவரம் எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ் ஆகிய விரைவு ரெயில்கள் சோழவந்தான் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.