பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை
புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி, நவ.19
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து புதுச்சேரி, காரைக்காலில் இன்றும் (வெள்ளிக்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.