கிராம சுகாதார செவிலியர்கள் போராட்டம்
விருதுநகரில் கிராம சுகாதார செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்ட கிராம சுகாதார செவிலியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சந்தனமாரி தலைமையில் துணை சுகாதார இயக்குனர் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடு நடந்தது. கொரோனா தடுப்பூசி இலக்கினை அடைவதற்கு மருத்துவர்களையும், கிராம சுகாதார செவிலியர்களையும் பொறுப்பாக்கும் நடை முறையை கைவிட வலியுறுத்தியும், வாரம் முழுவதும் தடுப்பூசி பணி மேற்கொள்வதால் கிராம சுகாதார செவிலியர்களுக்கு பணி சுமை ஏற்படுவதை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் இந்த ேபாராட்டம் நடைபெற்றது.