நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மூதாட்டி பலி சாவு எண்ணிக்கை 504 ஆக அதிகரிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மூதாட்டி பலி சாவு எண்ணிக்கை 504 ஆக அதிகரிப்பு;
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு மூதாட்டி ஒருவர் பலியானதால், இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 504 ஆக அதிகரித்து உள்ளது.
மூதாட்டி பலி
நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை கொரோனாவுக்கு 503 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில் நேற்று சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முள்ளுக்குறிச்சி பகுதியை சேர்ந்த 60 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி இறந்தார். எனவே இதுவரை மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியான நபர்களின் எண்ணிக்கை 504 ஆக அதிகரித்து உள்ளது.
இதேபோல் நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் 52,933 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே நேற்று புதிதாக 33 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்து 966 அதிகரித்து உள்ளது.
437 பேருக்கு சிகிச்சை
இந்த நிலையில் நேற்று 47 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இம்மாவட்டத்தில் இதுவரை 52, 025 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மீதமுள்ள 437 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.