ஜாமீனில் வெளியே வந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
இலுப்பூர் அருகே ஜாமீனில் வெளியே வந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
அன்னவாசல்:
போக்சோவில் கைது
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் கள்ளர்தெருவை சேர்ந்தவர் தங்கம். இவரது மகன் கார்த்திகேயன் (வயது 25). இவர், 17 வயது சிறுமியை காதலித்து வந்ததாகவும், இதன் காரணமாக சிறுமி கர்ப்பம் ஆனதால், சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக இலுப்பூர் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரையடுத்து இலுப்பூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி, கார்த்திகேயன் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அவரை கைது செய்து, புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.
தற்கொலை
இதையடுத்து 6 மாத சிறைத் தண்டனைக்கு பிறகு ஜாமீனில் தற்போது வெளியில் இருந்து வந்த கார்த்திகேயன் வழக்கின் தீர்ப்பு தனக்கு எதிராக வரும் என்ற மன நிலையில் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டு உத்தரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கார்த்திகேயன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.