செண்பகத்தோப்பு அணையில் இருந்து உபரிநீர் திறப்பு

செண்பகத்தோப்பு அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.

Update: 2021-11-18 17:49 GMT
கண்ணமங்கலம்

செண்பகத்தோப்பு அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. 

தொடர் மழை

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை அடுத்த படவேடு பகுதியில் உள்ள தாமரை ஏரி மிகவும் பெரிய ஏரி ஆகும். கால்வாய் ஆக்கிரமிப்பு காரணமாக கடந்த 25 ஆண்டுகளாக ஏரி நிரம்பவில்லை.

 தற்போது ஊராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீர் வரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் தண்ணீர் வரத்து ஏற்பட்டு தாமரை ஏரி முழுவதும் நிரம்பி வழிகிறது.

5,508 கனஅடி நீர் திறப்பு

மேலும் படவேடு செண்பகத்தோப்பு அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக 61 அடி உயரம் கொண்ட இந்த அணையில் தற்போது 54.12 அடி உயரத்துக்கு தண்ணீர் நிரம்பி உள்ளது.

இதன் காரணமாக ஏழு மதகுகள் மூலம் 5,508 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர். 

இதனால் கமண்டல நதிக்கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும் கண்ணமங்கலம் வழியாக ஓடும் நாகநதியிலும் தொடர் மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து செல்கிறது.

மேலும் செய்திகள்