வாணியாறு அணைக்கட்டு நிரம்பியது

வாணியாறு அணைக்கட்டு நிரம்பியது

Update: 2021-11-18 17:04 GMT
பொம்மிடி, நவ.19-
சேலம் மாவட்டம் ஏற்காடு சேர்வராயன் மலையில் பெய்த கன மழையினால் பாப்பிரெட்டிப்பட்டி அருகே வாணியாறு அணைக்கட்டுக்கு கடந்த சில நாட்களாகவே நீர்வரத்து அதிகரித்தது. கடந்த வாரம் அதன் முழு கொள்ளளவான 65 அடி எட்டியதை அடுத்து முழு உபரி நீரும் வாணியாறு மற்றும் இடது புற கால்வாய் வழியாக திறந்துவிடப்பட்டது. இதன் காரணமாக நீர்வடி பகுதியில் உள்ள வெங்கடசமுத்திரம் ஏரி, ஆலாபுரம் பெரிய ஏரி, தென்கரை கோட்டை ஏரி, பறையப்பட்டி ஏரிஉள்ளிட்டவை நிரம்பியது.
நேற்று முன்தினம் வினாடிக்கு 490 கனஅடி நீர்வரத்து இருந்தது. நேற்று வினாடிக்கு 390 கன அடியாக குறைந்து காணப்பட்டது. மேலும் மழை அளவு அதிகரித்தால் நீர்வரத்து அதிகரிக்கும் என்று உதவி பொறியாளர் தெரிவித்தார், அணைக்கு வரும் தண்ணீர் அனைத்தும் வாணி ஆற்றில் திருப்பி விடப்பட்டுள்ளது.
இதனால் வாணி ஆற்றில் வெள்ளம் ஆர்ப்பரித்து ஓடுகிறது. கரையோரம் தாழ்வான பகுதியில் குடியிருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வருவாய்த்துறையினர்எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்