நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வரு கிறது. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர், கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு உள்ளன. ஊட்டியில் கொட்டி தீர்த்த கனமழையால் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
இதையொட்டி மழை வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது இந்தநிலையில் தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று (வெள்ளிக்கிழமை) விடுமுறை விடப்படுகிறது.இதற்கான அறிவிப்பை கலெக்டர் (பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி வெளியிட்டு உள்ளார்.