பழனி முருகன் கோவிலில் திருக்கார்த்திகை விழா

பழனி முருகன் கோவிலில் திருக்கார்த்திகை விழா நடந்தது.

Update: 2021-11-18 16:47 GMT
பழனி:
அறுபடை வீடுகளில் 3-ம்படைவீடான பழனி முருகன் கோவிலில், கார்த்திகை திருவிழா கடந்த 14-ந்தேதி காப்புக்கட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று மாலை பரணி தீபம் ஏற்றப்பட்டு சண்முகர், வள்ளி, தெய்வானை மற்றும் சின்ன குமாரருக்கு சண்முக அர்ச்சனை நிகழ்ச்சி நடைபெற்றது. திருக்கார்த்திகை தினமான இன்று மாலை 4.45 மணிக்கு மேல் சின்னக்குமாரர் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளுவார். அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு தீப ஸ்தம்பத்தில் மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதேபோல் திருஆவினன்குடி கோவில், பெரிய நாயகி அம்மன் கோவில், லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட உள்ளது. கொரோனா பரவல் காரணமாக இந்நிகழ்ச்சிக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்