காரில் திடீர் தீ

நத்தத்தில் கார் திடீர் என தீப்பிடித்து எரிந்தது.

Update: 2021-11-18 16:38 GMT
நத்தம்:
நத்தம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி (வயது 64). நேற்று இவர் வீட்டின் முன்பு நின்றிருந்த தனது காரை இயக்க முயன்றார். அப்போது காரின் முன்பக்கம் எந்திர பழுது காரணமாக திடீரென தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து நத்தம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் நிலைய அலுவலர் லட்சுமணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதில் காரின் முன்பக்கம் முழுவதும் தீயில் எரிந்து சேதமடைந்தது. சம்பவம் தொடர்பாக நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்