மணல் திருட்டுக்கு இடையூறாக இருந்தவர் மீது தாக்குதல்; 2 பேர் கைது

கொசஸ்தலை ஆற்றில் மணல் திருட்டுக்கு இடையூறாக இருந்ததாக கூறி தாமரைப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 4 பேரும் நேற்றுமுன்தினம் மாலை ரமேஷ் வீட்டிற்கு வந்து அவரை தரக்குறைவாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது.

Update: 2021-11-18 14:41 GMT
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், அம்மணம்பாக்கம் கிராமம், பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் ரமேஷ் (வயது 45). இவர் இப்பகுதியிலுள்ள கொசஸ்தலை ஆற்றில் மணல் திருட்டுக்கு இடையூறாக இருந்ததாக கூறி தாமரைப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கவியரசன் (25), சுபாஷ் (25), பிரவீன், பூபதி ஆகிய 4 பேரும் நேற்றுமுன்தினம் மாலை ரமேஷ் வீட்டிற்கு வந்து அவரை தரக்குறைவாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனை தடுக்க முயன்ற அவரது மனைவி மற்றும் தாயையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து நேற்று ரமேஷ் வெங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் தலைமையில் போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கவியரசன், சுபாஷ் ஆகிய 2 வாலிபர்களையும் கைது செய்தனர். மேலும், தலைமறைவான பிரவீன், பூபதி ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்