திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் கருத்தரங்கம் நடந்தது

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் கருத்தரங்கம் நடந்தது

Update: 2021-11-18 14:04 GMT
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் அகதர மதிப்பீட்டு குழுவின் சார்பில், ‘சமுதாய சுத்திகரிப்பில் தனி மனிதர்களின் வளர்ச்சி’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் 2 நாட்கள் நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். அகதர மதிப்பீட்டு குழு ஒருங்கிணைப்பாளர் அந்தோணி சகாயசித்ரா வரவேற்று பேசினார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார்.
கல்லூரியின் ஓய்வுபெற்ற ஆங்கிலத்துறை தலைவர் தணிகாசலம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், தனிமனிதனின் மாற்றங்களும், வளர்ச்சியும் சமுதாயத்தை எப்படி சுத்திகரிக்கின்றது? என்பதை பல்வேறு பயிற்சிகள் மூலம் விளக்கி கூறினார். பேராசிரியர்கள் பாலு, சேகர், ஸ்ரீதேவி, பென்னட், கொலஞ்சிநாதன், பாகீரதி, திலீப்குமார், திருச்செல்வன் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். அகதர மதிப்பீட்டு குழு உதவி ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்