திருவண்ணாமலை கார்த்திகை தீப விழாவிற்கு பக்தர்கள் செல்ல வேண்டாம்: செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்

கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக திருவண்ணாமலை கார்த்திகை தீப விழாவிற்கு பக்தர்கள் செல்ல வேண்டாம் என்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2021-11-18 11:50 GMT
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக வருகிற 20-ந் தேதி வரை திருவண்ணாமலை கோவிலுக்குள் செல்லவும், கிரிவலம் செல்லவும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பதால், வெளியூர் மற்றும் வெளிமாவட்டங்கள் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் திருவண்ணாமலை நகருக்கு வருகை தருவதை தவிர்க்குமாறு திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். எனவே செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோவில் தீபதிருவிழாவிற்கு செல்வதை தவிர்க்குமாறு அதில் கூறப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்