காதல் தோல்வியால் கல்லூரி மாணவர் தற்கொலை

திருவேற்காட்டில் காதல் தோல்வியால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-11-18 08:57 GMT
தூக்குப்போட்டு தற்கொலை

திருவேற்காடு அடுத்த மாதிராவேடு, பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வீரபத்திரன். இவருடைய மகன் சுனில்குமார் (வயது 19). இவர் வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

சுனில்குமார் நேற்று முன்தினம் இரவு தனது அறைக்குள் சென்றவர் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு சுனில்குமார் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர், சுனில்குமாரை மீட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சுனில்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

காதல் தோல்வி

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த திருவேற்காடு போலீசார் சுனில்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் தன்னுடன் கல்லூரியில் பயின்று வந்த சகமாணவியை சுனில்குமார் காதலித்து வந்ததாகவும், தற்போது அந்த காதல் தோல்வி அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் அவரது தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்