பள்ளிபாளையம் அருகே வாகனம் மோதி பெண் சாவு போலீசார் விசாரணை

பள்ளிபாளையம் அருகே வாகனம் மோதி பெண் சாவு போலீசார் விசாரணை;

Update:2021-11-18 10:30 IST
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் அருகே நெட்டவேலாம்பாளையத்தில் தனியார் நூற்பாலை உள்ளது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். 
இந்த நிலையில் நேற்று காலை ஆனங்கூரை சேர்ந்த பாப்பாத்தி (வயது 59) என்பவர் நூற்பாலை பஸ்சில் வேலைக்கு வந்து மில்லில் இறங்கினார். பின்னர் பஸ் பின்புறம் நின்று கொண்டிருந்தார். அப்போது டிரைவர் பஸ்சை திடீரென பின்நோக்கி இயக்கியபோது எதிர்பாராதவிதமாக பாப்பாதி மீது மோதியது. 
இதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த பாப்பாத்தியை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பாப்பாத்தி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.  இதுகுறித்து வெப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர் கணபதியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்