ரூ.2 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

ரூ.2 லட்சத்துக்கு பருத்தி ஏலம்;

Update:2021-11-18 10:29 IST
எலச்சிபாளையம், நவ.18-
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகமான திருச்செங்கோட்டில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் பி.டி. ரக பருத்தி குவிண்டாலுக்கு ரூ.5,589 முதல் ரூ.8,500 வரையிலும் சுரபி ரக பருத்தி குவிண்டாலுக்கு ரூ.7,069 முதல் ரூ.8,500 வரையிலும் விற்பனை ஆனது. மொத்தம் 145 மூட்டைகள் பருத்தி ரூ.2 லட்சத்துக்கு ஏலம் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
==========

மேலும் செய்திகள்