சேலம் மாவட்டத்தில் மேலும் 41 பேருக்கு பாதிப்பு-கொரோனாவுக்கு 2 பேர் பலி

சேலம் மாவட்டத்தில் மேலும் 41 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. கொரோனாவுக்கு 2 பேர் பலியாயினர்.

Update: 2021-11-17 22:38 GMT
சேலம்:
சேலம் மாவட்டத்தில் மேலும் 41 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. கொரோனாவுக்கு 2 பேர் பலியாயினர்.
கொரோனா பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 38 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்று 41 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 14 பேர், சேலம் ஒன்றியத்தில் 17 பேர், ஆத்தூர் பகுதிகளில் 7 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
இதுதவிர சேலம் மாவட்டத்துக்கு நாமக்கல்லில் இருந்து வந்த 2 பேரும், ஈரோட்டில் இருந்து வந்த ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 51 பேர் குணமடைந்து விட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 533 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
2 பேர் சாவு
மாவட்டத்தில் கொரோனாவுக்கு இதுவரை ஒரு லட்சத்து 699 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சேலத்தை சேர்ந்த 50 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் 79 வயதுடைய முதியவரும் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி தனியார் ஆஸ்பத்திரிகளில் பரிதாபமாக இறந்தனர். இவர்கள் உள்பட மாவட்டத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 694 ஆக உயர்ந்துள்ளன.

மேலும் செய்திகள்