ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் மறைமுக ஏலம்
கொட்டாம்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் மறைமுக ஏலம் நடந்தது.
கொட்டாம்பட்டி
கொட்டாம்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் மறைமுக ஏலம் நடந்தது.
ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்
கொட்டாம்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்றது. இதுகுறித்து வேளாண்மை விற்பனை குழு செயலாளர் மெர்சி ஜெயராணி கூறியிருப்பதாவது, மதுரை மாவட்டத்தில் முதன்முறையாக கொட்டாம்பட்டி தற்காலிக துணைச் சந்தையில் கொட்டாம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் செயலாளர் மெர்சி ஜெயராணி முன்னிலையில் ஏலம் தொடங்கியது.
கொட்டாம்பட்டியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தி குழுக்கள் 3492 தேங்காய்களை மூன்று குவியலாக கொண்டு வந்தனர். மறைமுக ஏலத்தில் 11 தேங்காய் வியாபாரிகள் பங்கேற்றனர். இந்த மறைமுக ஏலத்தில் 34,878 ரூபாய்க்கு ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் அதிகபட்ச விலையாக ஒரு தேங்காய் ரூ.10.50-க்கும், குறைந்த விலையாக ரூ.9-க்கும் ஏலம் போனது. வியாபாரிகளிடம் இருந்து பணம் உடனடியாக பெறப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
மறைமுக ஏலம்
விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் கோரிக்கையை தொடர்ந்து இனிவரும் நாட்களில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தேங்காய் மறைமுக ஏலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆகவே, விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் இதனை முறையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. தேங்காய் ஏலம் தொடர்பாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஒழுங்கு முறை விற்பனை கூட மேலாளரை 9629079588 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.