நெல்லையப்பர் கோவிலில் சிறப்பு வழிபாடு
கார்த்திகை மாத பிறப்பையொட்டி நெல்லையப்பர் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.;
நெல்லை:
கார்த்திகை மாத பிறப்பையொட்டி நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதைத்தொடர்ந்து காந்திமதி அம்பாள் சன்னதியில் பள்ளியறையில் இருந்து தங்கப்பல்லக்கில் சுவாமி எழுந்தருளினார். பின்னர் மேளதாளத்துடன், திருவனந்தல் வழிபாட்டுக் குழுவினரின் திருமுறையுடன் அழைத்துச் சென்று சுவாமி நெல்லையப்பர் சன்னதியில் வைத்து சிறப்பு பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து கஜபூஜை, கோபூஜை நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.