மருத்துவ முகாம்
வத்திராயிருப்பில் நடைபெற்ற மருத்துவ முகாமில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பில் தமிழக அரசின் உத்தரவு படி மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வத்திராயிருப்பு வட்டார மருத்துவ அலுவலர் ஜெயராமன் தலைமை தாங்கினார். மருத்துவர் வன்னிய ராஜ் மற்றும் நடமாடும் மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர். இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.