சத்திரரெட்டியபட்டியில் புதிய மின் மாற்றி
சத்திரரெட்டிப்பட்டியில் புதிய மின்மாற்றி ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
விருதுநகர்,
விருதுநகர் அருகே உள்ள சத்திரரெட்டியபட்டி கிராமத்தில் காமராஜ் காலனி பகுதியில் குறைந்த மின் அழுத்த பிரச்சினையால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் எம்.எல்.ஏ. அப்பகுதியில் புதிய மின் மாற்றி அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதன் பேரில் தற்போது ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் 28 மின்கம்பங்கள் நடப்பட்டு புதிய மின் மாற்றி நிறுவப்பட்டது. அதனை ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். இதன் மூலம் அப்பகுதி மக்களுக்கு இருந்து வந்த குறைந்த மின்னழுத்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் சத்திரரெட்டிய பட்டி பஞ்சாயத்து தலைவர் மருதுராஜ், மின் வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி, மின்வாரிய உதவி என்ஜினீயர்கள் சங்கரானந்த், ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.