ஆழ்வார்குறிச்சி அருகே 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை
10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
கடையம்:
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கீழாம்பூர் கணேசபுரத்தை சேர்ந்தவர் குமார். இவருடைய மகள் செல்வி (வயது 16). இவர் விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் செல்வியை சரியாக பள்ளிக்கு சென்று நன்றாக படிக்குமாறு அவரது தந்தை கண்டித்தார்.
இதனால் மனமுடைந்த செல்வி நேற்று முன்தினம் மாலையில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.