750 மையங்களில் தடுப்பூசி முகாம்
விருதுநகர் மாவட்டத்தில் 750 மையங்களில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது.
விருதுநகர்,
தமிழகம் முழுவதும் வாரந்தோறும் இனி வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) 750 மையங்களில் 80 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்து மெகாதடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நகராட்சி, பேரூராட்சி மற்றும் பஞ்சாயத்து பகுதியில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்கள், துணை ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறும். மேற்கண்ட தகவலை கலெக்டர் மேகநாதரெட்டி கூறினார்.