ஏலகிரி ஏரி 6 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி கோடி போனது

ஏலகிரி ஏரி 6 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி கோடி போனது. இதனால் ஆடு பலியிட்டு வழிபட்டனர்.

Update: 2021-11-17 18:11 GMT
ஜோலார்பேட்டை

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி கிராமத்தில் உள்ள ஏலகிரி ஏரி 2015-ம் ஆண்டு பெய்த கனமழையால் நிரம்பி கோடி போனது. 

அதேபோல் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் 6 ஆண்டுகளுக்கு பிறகு ஏலகிரிஏரி நிரம்பி கோடி போனது. 

இதனால் கிராம மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் ஏலகிரி ஊராட்சி மன்ற தலைவர் ரகு, தி.மு.க. நகர பொறுப்பாளர் ம.அன்பழகன் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏலகிரிஏரிக்கு வந்து, கோடி போகும் இடத்தில் மலர்களை தூவி சிறப்பு பூஜைகள் செய்து, ஆடு வெட்டி பலியிட்டு வழிபட்டனர்.

மேலும் செய்திகள்