செட்டேரி ஏரிக்கரையில் விரிசல்
தண்ணீர் நிரம்பி வழிந்தோடும் செட்டேரி ஏரிக்கரையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
கலசபாக்கம்
தண்ணீர் நிரம்பி வழிந்தோடும் செட்டேரி ஏரிக்கரையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
ஏரிக்கரையில் விரிசல்
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் ஒன்றியம் கேட்டவரம்பாளையத்தில் செட்டேரி உள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஏரி நிரம்பி வழிகின்றன. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் ஏரிக்கரையில் பெரிய விரிசல் ஏற்பட்டு அதன் மூலம் தண்ணீர் கசிந்து வருகின்றன. இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
ஆபத்தான நிலையில் உள்ள இந்த ஏரிக்கரையின் வழியாக 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வருகின்றனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் சரவணன் எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது ஏரிக்கரையின் சாலையின் தன்மை மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் இந்த சாலையில் யாரும் செல்லாதவாறு எச்சரிக்கை பலகை அமைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பேனர் வைப்பு
அதைத் தொடர்ந்து கேட்டவரம்பாளையம் ஊராட்சி சார்பில் செட்டேரியின் கரை பலம் இழந்த நிலையில் உள்ளதால் இதன் வழியில் யாரும் செல்ல வேண்டாம் என்றும், மாற்று வழியில் செல்ல வேண்டும் என வலியுறுத்தி எச்சரிக்கை பேனர் வைத்துள்ளனர்.
இது சம்பந்தமாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரியின் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.