பிளஸ் 2 மாணவியை கடத்தி திருமணம் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

பிளஸ்-2 மாணவியை கடத்தி திருமணம் செய்தவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-11-17 18:01 GMT
 குடியாத்தம்
பிளஸ்-2 மாணவியை கடத்தி திருமணம் செய்தவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

குடியாத்தம் பகுதியை சேர்ந்த 17 வயது நிரம்பிய பிளஸ்-2 மாணவி கடந்த சில தினங்களுக்கு முன்பு காணாமல் போய் விட்டார். இது குறித்து மாணவியின் பெற்றோர் குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த மாணவி பயன்படுத்திய செல்போனுக்கு வந்த அழைப்புகளை வைத்து நடத்திய விசாரணையில் ேக.வி.குப்பத்தை அடுத்த நாகல் கிராமத்தைச் சேர்ந்த சுந்தர் என்பவருடைய மகன் சுகேஷ்குமார் (வயது 20) என்பவர் அதிகமுறை பேசியது தெரியவந்தது. 

நாகல் கிராமத்தில் சுகேஷ்குமார் இருப்பதை அறிந்த  குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் உள்ளிட்ட போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அந்த மாணவியுடன் சுகேஷ்குமார் இருந்தது தெரியவந்தது.

தொடர்ந்து விசாரணை நடத்தியதில் மிஸ்டுகால் மூலம் கடந்த 10 மாதங்களாக காதலித்து வந்ததும், அந்த மாணவியை ஆசை வார்த்தைகள் கூறி சில தினங்களுக்கு முன் கடத்தி வந்து திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது. இதனையடுத்து மாணவியை மீட்டு சுகேஷ்குமாரை போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும் செய்திகள்