வேடசந்தூர் அருகே தொழிலாளி வீட்டில் தீப்பிடித்து எரிந்த டி.வி.

வேடசந்தூர் அருகே தொழிலாளி வீட்டில் டி.வி. தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.;

Update: 2021-11-17 17:44 GMT
வேடசந்தூர்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள நாகையன்கோட்டை காலனியை சேர்ந்தவர் கோவிந்தன். கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் தனது வீட்டில் குடும்பத்துடன் அமர்ந்து டி.வி. பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அந்த டி.வி.யில் இருந்து திடீரென்று கரும்புகை வந்தது. சிறிது நேரத்தில் டி.வி. தீப்பிடித்து எரிந்தது. 
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கோவிந்தனும், அவரது குடும்பத்தினரும் அலறியடித்து கொண்டு வீட்டைவிட்டு வெளியே ஓடி வந்தனர். பின்னர் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து டி.வி.யில் எரிந்த தீயை அணைக்க முயன்றனர். அப்போது வீட்டின் மின்சாரத்தை துண்டித்துவிட்டு, டி.வி.யில் எரிந்த தீயை தண்ணீரில் நனைய வைத்த சாக்குப்பையால் அணைத்தனர். 
இதனால் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் தடுக்கப்பட்டது. டி.வி. தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்