மாலை அணிந்து விரதம் தொடங்கிய அய்யப்ப பக்தர்கள்

கார்த்திகை மாதம் பிறந்ததையடுத்து நேற்று முதல் அய்யப்ப பக்தர்கள் கோவில்களுக்கு சென்று மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.

Update: 2021-11-17 17:42 GMT
காரைக்குடி, 
கார்த்திகை மாதம் பிறந்ததையடுத்து நேற்று முதல் அய்யப்ப பக்தர்கள் கோவில்களுக்கு சென்று மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
மாலை அணிவிப்பு
 கார்த்திகை மாத  பிறப்பையொட்டி  சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர், சிங்கம்புணரி, காளையார் கோவில், கல்லல், மானாமதுரை, திருப்புவனம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அய்யப்ப பக்தர்கள் அந்தந்த பகுதியில் உள்ள கோவில்களில் குருசாமியிடம் மாலை அணிவித்து விரதம் தொடங்கினர்.
காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் காரைக்குடி முத்தூரணி பகுதி, பருப்பூரணி பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு சென்று நேற்று அதிகாலை முதல் மாலை அணிந்து விரதம் இருக்க தொடங்கினர். 
பஜனை பாடல்
நேற்று முதல் கார்த்திகை மாத பிறப்பையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கருப்பு வேட்டி, துண்டு அணிந்த நிலையில் ஏராளமான அய்யப்ப பக்தர்களை காண முடிந்தது. மேலும் பல்வேறு இடங்களில் அய்யப்ப பஜனை பாடல்கள் பாடப்பட்டன.

மேலும் செய்திகள்