இடி மின்னலுடன் விடிய விடிய மழை

திருப்புவனம் பகுதியில் இடி மின்னலுடன் விடிய விடிய மழை பெய்தது.

Update: 2021-11-17 17:35 GMT
திருப்புவனம், 
திருப்புவனம் பகுதியில் நேற்று முன்தினம் பகல் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் இரவு இடி மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை விடிய விடிய பெய்து கொண்டே இருந்தது. இந்த மழையால் சாலைகள், பள்ளங்கள், வீதிகள், தெருக்களில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது. விடிய விடிய பெய்த மழையால் குடிநீர் ஆதாரம் உயர வாய்ப்பு உள்ளதாகவும் தெரிய வருகிறது. இது வரை 61 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. தொடர் மழையால் கோர்ட்டு வாசலின் முன்பு உள்ள பழமையான மரங்கள் நேற்று அதிகாலை மதுரை மண்டபம் தேசிய நெடுஞ்சாலையில் முறிந்து விழுந்தன. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார், பொதுமக்கள் ரோட்டில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தினர். அதன்பின்பு போக்குவரத்து சரி செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்