கோவை
கோவை பீளமேடு- சிங்காநல்லூர் செங்காளியப்பன் நகர் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் 25 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது. இது குறித்த தகவலின் பேரில் கோவை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
பின்னர் அவர்கள் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அவர் தண்டவாளத்தை கடக்கும் போது ரெயிலில் அடிபட்டு இறந்ததாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து தெரியவில்லை. அவரது மார்பில் சவுசல்யா என்று பச்சை குத்தப்பட்டு இருந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.