வேலை கிடைக்காத விரக்தியில் என்ஜினீயர் தற்கொலை
திண்டுக்கல்லில் வேலை கிடைக்காத விரக்தியில் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் கோவிந்தாபுரத்தை சேர்ந்தவர் மருதை இளங்கோ (வயது 29). என்ஜினீயரான இவர், வேலை கிடைக்காமல் வீட்டில் இருந்து உள்ளார். இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த அவர் திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். இதையடுத்து பெற்றோர், அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து திண்டுக்கல் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், வேலை கிடைக்காத விரக்தியில் மருதை இளங்கோ அரளிக்காயை தின்று தற்கொலை செய்தது தெரியவந்தது. மேலும் அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.